ரூ.500க்கு சிலிண்டர் பெறலாம்; எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ..

India LPG cylinder
By Sumathi Jan 17, 2024 10:58 AM GMT
Report

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் மானியத்துடன் பெறுவது குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலிண்டரின் விலை

கச்சா எரிபொருள் விலை, ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொறுத்தே கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

lpg cylinder price

அந்த வகையில், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லாமலும், வணிக உபயோக சிலிண்டரின் விலை மட்டும் தொடர்ந்து உயர்த்தப்பட்டும் வருகிறது.

ரூ.500க்கு சமையல் சிலிண்டர் - அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.500க்கு சமையல் சிலிண்டர் - அரசு அதிரடி அறிவிப்பு!

உஜ்வாலா திட்டம்

இந்நிலையில், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டிற்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.500க்கு சிலிண்டர் பெறலாம்; எப்படி தெரியுமா? முழு விவரம் இதோ.. | How To Get Cylinder At Rs500 Full Details

தற்போது இந்தியாவில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.950க்கு விற்பனையாகிறது. இது நகரத்திற்கு நகரம் மாறுபடலாம். ஆனால், யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. தற்போது, கேஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு கிடைக்கும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

அரசால் வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இதை பெற முடியும். டெல்லியில் வசிப்பவராக இருந்தால், அங்கு சிலிண்டர் 903 ரூபாய்க்கு கிடைக்கும், சிலிண்டரை வாங்கிய பிறகு, 300 ரூபாய் மானியமாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.