ஸ்ட்ராபெர்ரியை இப்படி சாப்பிடவே கூடாது.. எச்சரித்த மருத்துவர் - இனி இதை follow பண்ணுங்க!
நாம் பொதுவாக ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடும் விதம் முற்றிலும் தவறானது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோஃப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், ஃபோலிக் ஆசிட், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், காப்பர், மாங்கனீசு,
அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்கள் உள்ளது. இத்தகைய சத்துமிக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தின் இலைகளை நீக்கி நாம் விதம் முற்றிலும் தவறானது என மருத்துவர் கரண் ராஜ் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
உண்மையில், ஸ்ட்ராபெரி பழத்தை விட இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஸ்ட்ராபெரி இலைகளில் மெக்னீசியம், ஃபைபர் சத்து நிறைந்துள்ளன. ஸ்ட்ராபெர்ரிக்களின் இலைகளைத் தவிர்க்காமல் பழங்களோடு சேர்த்துச் சாப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சாப்பிடும் விதம்
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு 40 கிராம் பேக்கிங் சோடா மற்றும் ஒயிட் வினிகரை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் போட்டு சுமார் 5 நிமிடம் ஊறவைத்து, பின் மென்மையாகக் கழுவவும். இப்படிச் செய்வதன் மூலம் பூச்சிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நீங்கிவிடும்.
பின் அவற்றைச் சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இருக்காது. இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்களும் பரிந்துரைகளும் பொதுவான அறிவு அடிப்படையாகக் கொண்டவை ibc தமிழ் அதை ஏற்கவில்லை.