ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தற்காலத்தில் அனைத்தும் இணைய மயமாகி வரும் நிலையில், ரேஷன் கார்டையும் ஆன்லைனிலேயே Download செய்து கொள்ள முடியும்.
ரேஷன் கார்டை ஆன்லைனில் Download செய்வதற்கான படிமுறைகள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் என்றால் என்ன?
ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அரசாங்க ஆவணம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவமாகும்.
Download செய்வது எப்படி?
அதற்கு முதலில் உங்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கமானது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.அந்த மொபைல் எண் உங்கள் கையில் இருக்க வேண்டும்.
இதனையடுத்து, தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் வேண்டும்.

முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள "பயனாளி நுழைவு" என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
திரையில் தோன்றும் 'Captcha' குறியீட்டைச் சரியாக டைப் செய்யவும். இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு 'பதிவு செய்' என்பதைக் கிளிக் செய்யவும்.
உள்ளே சென்றதும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய பக்கம் திறக்கும். அதில் இடதுபுறம் உள்ள மெனுவில் Smart Card Print என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் உங்கள் ஸ்மார்ட் கார்டின் மாதிரித் தோற்றம் திரையில் தெரியும். கீழே உள்ள "Download PDF" அல்லது "சேமி" என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் மொபைல் அல்லது கணினியில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

இதை நீங்கள் லேமினேட் செய்து அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த E-Ration Card அனைத்து தேவைகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். TNPDS இணையதளம் மட்டுமின்றி, 'TNPDS' என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகள் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப இந்தப் போர்ட்டல் மாறுபடும். ஸ்மார்ட் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் மேலே கூறப்பட்டுள்ள படிமுறைகளை பயன்படுத்தி எளிய முறையில் Download செய்யலாம்.