கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்..இனி Online Cancel செய்ய முடியும்- இப்படி பண்ணுங்க!
கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை இனி ஆன்லைனில் கேன்சல் செய்ய முடியும்.
ரயில் டிக்கெட்
டிக்கெட்டின் விலை குறைவு, பயண நேரமும் குறைவு மற்றும் சரியான நேரத்தில் சென்று சேர முடியும் என்பதால் ரயில் சேவையைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. பொதுவாக நாம் ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி ஆன்லைன் மூலம் எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அப்படி ஐஆர்சிடிசி தளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், அதை எளிதாகச் செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியும். ஆனால் கவுண்ட்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டைஆன்லைனில் ரத்து செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Step :1 முதலில் நீங்கள் முன்பதிவு கவுண்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டை ரத்து செய்ய ஆர்சிடிசி வலைத்தளத்திற்குச் சென்று Cancel Ticket என்ற விருப்பத்தைத் க்ளிக் செய்ய வேண்டும்.
கேன்சல்
Step :2 பின்னர்https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf இந்த பக்கம் வரும். அதில் கவுண்ட்டரில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் இருக்கும்PNRஎண், train numberமற்றும் பாதுகாப்புக்கான கேப்ட்சாவுடன் டைப் செய்ய வேண்டும்.
Step :3 இதை தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTPஅனுப்பப்படும். OTP-ஐ டைப் செய்து உறுதிப்படுத்திய பிறகு, முன்பதிவு செய்த பயணிகளின் விவரங்கள் தெரியும். இதையடுத்து submitஎன்கிற பட்டனை கிளிக் செய்தவுடன் கவுண்ட்டரில் முன்பதிவு செய்ய டிக்கெட் ரத்து செய்யப்படும்.
குறிப்பாக நீங்கள் கவுண்ட்டரில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைனில் கேன்சல் செய்தாலும், ஆன்லைன் வழியாக ரீபண்ட் பெற முடியாது. அப்படி நீங்கள் கேன்சல் செய்த டிக்கெட் பணம் கிடைக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ரயில் நிலையங்களின் கவுண்ட்டருக்கு தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது