கடைசி 15 நிமிடத்திற்கு முன்.. வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
வந்தே பாரத்
தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக பயணிகள் முன்பதிவு அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காலியான இருக்கைகள் நிகழ் நேரத்தில் தெரியும். கரண்ட் புக்கிங் ஆப்ஷனை பயன்படுத்தி இந்த ரயில்களில் கடைசி 15 நிமிடம் வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
டிக்கெட் முன்பதிவு
தற்போது, தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி கிடைக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் செயல்படுகின்றன.
கடைசி நிமிட முன்பதிவு வசதி கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பட்டியல் இதோ..
- வண்டி எண் - 20631 மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல்,
- வண்டி எண் - 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல்,
- வண்டி எண் - 20627 சென்னை எழும்பூர் - நாகர்கோவில், 20628 நாகர்கோவில் - சென்னை எழும்பூர்,
- வண்டி எண் - 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு கான்ட்.,
- வண்டி எண் -20646 மங்களூர் சென்ட்ரல் - மடகாவ்,
- வண்டி எண் - 20671 மதுரை - பெங்களூர் கான்ட்.,
- வண்டி எண் - 20677 டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - விஜயவாடா.