தஞ்சாவூர் தேர் விபத்து நடந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்..!
94 வது அப்பர் குரு பூஜை திருவிழா தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் பழமையான அப்பர் படம் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல தேரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தேர் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது திருப்பம் ஒன்றில் தேர் திரும்பும் போது தான் அந்த விபரீத நிகழ்வு நடந்தது.
திருப்பத்தில் தேர் வேகமாக திரும்பும் போது அதன் உச்சி பகுதி மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்தது.
தேருக்குள் இருந்தவர்கள் மின்சாரம் தாக்கி அலறினர்.அதே நேரம் தேருக்கு அருகே இருந்தவர்களையும் மின்சாரம் தாக்கியது.
இதை கண்ட பொதுமக்கள் தேரை நோக்கி அச்சத்துடன் ஓடி வந்தனர்.ஆனால் மின்சாரம் பாய்ந்தது குறித்து சிலர் எச்சரித்ததால் ஓடி வந்தவர்கள் அப்படியே பயந்து நின்று விட்டனர்.
இதனால் மேலும் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.எனினும் உயிர் மின் அழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தேர் தீ பிடித்த எரிந்தது.
தேர் திருவிழாக்களை நடத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த துயரச் சம்பவம் உணர்த்தியுள்ளது.