தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி - லட்ச கணக்கில் லாபம்
தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.
வெள்ளி விலை
கடந்த 20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் தகவலின்படி 2005 டிசம்பர் 23ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹12,650ஆக இருந்தது.

அப்போது நீங்கள் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு 7.9 கிலோ வெள்ளி கிடைத்திருக்கும். இன்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.44 லட்சமாக இருக்கிறது. அதாவது 7.9 கிலோவுக்கு ரூ.19.27 லட்சம் இருக்கும்.
அதாவது 20 ஆண்டுகளில் உங்களுக்கு ₹18,27,600 லாபம். அதாவது 1827% லாபமாகும். அதாவது நீங்கள் ரூ.10,000ஐ முதலீடு செய்திருந்தாலும் கூட அது கிட்டத்தட்ட ரூ.1.9 லட்சமாக மாறி இருக்கும். இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில்,
வளர்ச்சி
"தங்கமும் வெள்ளியும் முதலீட்டிற்கு நல்லது என்றாலும் அது எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்கும் என சொல்ல முடியாது. எந்தவொரு முதலீட்டைப் போலவும் ஏற்ற இறக்கம் மாறி மாறியே இருக்கும். சீராகத் தங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
நிலைத்தன்மைக்காகத் தங்கத்தை வைத்திருக்க வேண்டும். வளர்ச்சிக்காக வெள்ளியை வைத்திருக்க வேண்டும்" என்கின்றனர்.
மேலும் சர்வதேச சந்தை, தொழில் தேவையைப் பொறுத்து ஒரேயடியாக 30% வரை கூட வெள்ளி விலை சரிய வாய்ப்பிருக்கிறது என்றும் அதை நிராகரித்துவிட முடியாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.