உடலில் தழும்புகளா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!

Cashew Fruit Face Mask
By Sumathi Jun 23, 2022 11:53 AM GMT
Sumathi

Sumathi

in அழகு
Report

புதிதாக ஏற்பட்டத் தழும்புகள் உங்கள் அழகை குறைக்கிறதா? காயத்தை விரைவாக குணமாக்க கொலாஜன் அந்த இடத்தில் படியும், அது தான் தழும்புகளை ஏற்படுத்தும்.

உடலில் தழும்புகளா? இதை ட்ரை பண்ணுங்க போதும்! | How Remove Skin Scars Naturally

இந்த தழும்புகள் தானகவே மறைந்துவிடும், ஆனால் அது மறையும் வேகத்தை கூட்டுவதற்கு நாம் இந்த கீழ்கண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். 

தழும்புகளை நீக்கும் ஆறு உணவுகள்

காயங்களை விரைவாக குணப்படுத்தி, தழும்புகளையும் வேகமாக மறைய செய்ய பச்சை பட்டாணி, ப்ரக்கோலி, பாதாம், கருப்பு பீன்ஸ், சக்கரவல்லி கிழங்கு, ஆரஞ்சு ஆகிய ஆறு உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

உடலில் தழும்புகளா? இதை ட்ரை பண்ணுங்க போதும்! | How Remove Skin Scars Naturally

 பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் ஏ கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் பி1, நார் சத்து, இறும்புச்சத்து ஆகிய சத்துக்களும் உள்ளது. தினமும் 85 கிராம் பச்சை பட்டாணியை எடுத்துக்கொண்டால் தோல் செல்களை விரைவில் குணமடையச் செய்து தழும்புகளை நீக்கும்.

ப்ரக்கோலி 

ப்ரக்கோலியில் அதிகமாக உள்ள வைட்டமின் சி புது தோல் செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இருமுறை எடுத்துக்கொள்ளலாம். மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வரை ஆவியில் வேகவைத்தப்பின் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

 பாதாம் பருப்பு

பாதாமில் உள்ள வைட்டமின் இ சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதோடு, சருமத்தை மிருதுவாகவும் வைக்கும். ஒரு நாளில் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடலாம். அதை நேரடியாகவும் எடுத்துக்கொள்ளலாம், பொடியாக நருக்கி கஞ்சியில் போட்டும், உணவில் கலந்தும் உட்கொள்ளலாம்.

கருப்பு பீன்ஸ் 

ஒரு கைப்பிடி கருப்பு பீன்ஸில் எட்டு கிராம் புரதம் உள்ளது. இதனால் புதிய செல்கள் வேகமாக உருவாகும். கருப்பு பீன்ஸில் புரதத்தோடு வைட்டமின் பி1, இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளது. இதனை வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.

சக்கரவல்லி கிழங்கு

இதில் உள்ள அதிகபடியான வைட்டமின் ஏ தோலின் மேல் பரப்பில் உள்ள செல்களை விரைவாக குணமடைய செய்யும். ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை 85 கிராம் சக்கரவல்லி கிழங்கை எடுத்துக்கொள்ளவது நல்ல பயன் தரும். வேக வைத்து உட்கொண்டால் சத்துக்களின் பலனை முழுவதுமாக அடையலாம்.

ஆரஞ்சு 

வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களான ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்வது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும் என்று இல்லை, பழச்சாறாகவும் உட்கொள்ளலாம். உணவுக்கு பின்னர் எடுத்துக்கொள்வது நன்மையைத் தரும்.

உடலில் தழும்புகளா? இதை ட்ரை பண்ணுங்க போதும்! | How Remove Skin Scars Naturally

 புதிதாக ஏற்பட்ட தழும்புகளை நீக்க வைட்டமின்கள் சி, ஏ, பி காம்ப்ளெக்ஸ், புரதச் சத்து ஆகியன அதிக அளவில் தேவைப்படும்.

இவைகளைக் கொண்ட உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொண்டாலே தழும்புகளை விரைவில் நீக்கிவிடலாம்.

- வ. சபரிதா