மோடி இந்தியாவின் ராஜபக்சவாக செயல்படுகிறார்!

By Swetha Subash May 19, 2022 01:17 PM GMT
Report

இலங்கையில் மக்களின் கடுமையான போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச கடந்த சில வாரங்களுக்கு முன்பு விலகினார்.

இதனையடுத்து மகிந்த ராஜபக்ச ஆதரவு அரசியல்வாதிகளை டார்கெட் செய்து பொதுமக்கள் தாக்க தொடங்கினர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறி 100-க்கும் அதிகமான ராஜபக்சே ஆதரவாளர்கள் வீடுகள் தீ வைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.  இதனையடுத்து மகிந்த ராஜபக்ச கொழும்பை விட்டு தப்பி ஓடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தார்.

இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இலங்கையில் தற்போது வெடித்திருக்கும் மக்கள் புரட்சி மத்திய அரசுக்கு அடித்திருக்கும் எச்சரிக்கை மணி என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கருத்துக்கள் குறித்து விரிவாக ஐபிசி சேனலுக்கு தன்னுடைய பேட்டியின் மூலம் பதில் கூறியுள்ளார் திரு.வே.மதிமாரன் அவர்கள்.