‘ஆத்தாடி...எவ்வளவு பெருசு’ - பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி வீடியோ

kingcobra snake rescue
By Petchi Avudaiappan Sep 07, 2021 08:05 PM GMT
Report

கர்நாடகாவில் பாம்பின் வாலை இளைஞர் ஒருவர் பிடித்து இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். எந்த பாம்பாக இருந்தாலும் பயந்து ஓடுபவர்களே அதிகம். ஆனாலும் சிலர் மட்டும் கொடிய விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் அசால்டாக பிடித்து கெத்து காட்டுவார்கள்.

அதேசமயம் சில சமயங்களில் அத்தகைய பாம்பே நமக்கு எமனாக அமைந்து விடும். அந்த வகையில் ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வீட்டின் குளியலறை ஒன்றில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

அதனை பிடிக்க சென்ற பாம்பு பிடிக்கும் இளைஞர், சிறிய நாகம் என்று நினைத்து அதன் வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது 14 அடி உயர ராஜநாகம் வெளியே வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் சற்று தாமதித்து நகராமல் இருந்திருந்தால் நாஜநாகத்தின் கொடிய விஷத்திற்கு ஆளாகி ரத்தம் உறைந்து இறந்து போய் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.