Wednesday, Mar 19, 2025

விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா?

NASA World Sunita Williams
By Vidhya Senthil a day ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்சுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 சுனிதா வில்லியம்

புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்கு சென்ற நிலையில் தொழிலில் நுட்பகோளாறு காரணமாக சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா? | How Much Will Sunita Williams Get Paid Details

இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு புதன்கிழமை அதிகாலை 3.27 மணி அளவில் வந்தடைய உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.இந்த நிலையில் விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்சுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சர்வதேச விண்வெளி வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

2 விஞ்ஞானிகளும் ஜி.எஸ்.-15 சம்பள பிரிவில் வருபவர்கள். இந்த உயர் வகை பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படை சம்பளம் 12 லட்சத்து 5 ஆயிரத்து 133 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 அமெரிக்க டாலர் வரைஇருக்கும்.

சம்பளம் 

அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.08 கோடி முதல் ரூ.1. 41 கோடி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த இருவருக்கும் 93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை சம்பளம் கிடைக்க பெறும்.

விண்வெளியில் 9 மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம் - எவ்வளவு சம்பளம் தெரியுமா? | How Much Will Sunita Williams Get Paid Details

இந்திய மதிப்பில் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை ஆகும். கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் 94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என தெரிய வந்துள்ளது.அதாவது இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி ஆகும்.