ஒரே ஆண்டில் ரூ.2,244 கோடி நன்கொடை பெற்ற பாஜக - திமுகவிற்கு எவ்வளவு தெரியுமா?

Indian National Congress DMK BJP India Money
By Karthikraja Dec 26, 2024 08:30 PM GMT
Report

 அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி நன்கொடை

2023 - 2024 ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

bjp congress donations

இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் தேர்தல் பாத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள் சேர்க்கப்படவில்லை. அந்த தகவல்கள் வருடாந்திர தணிக்கையில் போது அளிக்கப்படும். ஆனால் சில கட்சிகள் அந்த தகவல்களை தாமாக முன் வந்து அளித்துள்ளன.

பாஜக காங்கிரஸ்

அதன்படி கடந்த 2023-2024-ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு சுமார் ரூ.2,244 கோடி கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட பாஜக 212 சதவீதம் அதிக நிதி பெற்றுள்ளது. 

[ISVIY ]

காங்கிரஸ் கட்சி 2023-2024-ம் ஆண்டில் ரூ.288.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. கடந்த 2022-2023 ஆண்டில் ரூ.79.9 கோடி பெற்றிருந்தது. 

congress donations

பாஜக அதிகபட்சமாக ப்ரூடெண்ட் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மூலம் மட்டும் ரூ. 723.6 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதே டிரஸ்ட் காங்கிரஸுக்கு ரூ.156.4 கோடி அளித்துள்ளது. பாரதி ஏர்டெல், சீரம் நிறுவனம், மேகா என்ஜினியரிங், இன்ஃப்ரா லிமிடெட், ஆர்செலர் மிட்டல் குழுமம் ஆகிய நிறுவனங்கள் ப்ரூடெண்ட்டுக்கு அதிக நன்கொடை அளித்தவர்கள்.

திமுக

இந்தியாவின் 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், 2023-24 ஆண்டில் பாஜகவிற்கு ரூ.3 கோடி நன்கொடைகளை அளித்துள்ளது. 

தேர்தல் பாத்திரங்கள் மூலம் பாரதிய ராஷ்டிர சமிதி ரூ. 495.5 கோடி, திமுக ரூ.60 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 121.5 கோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ரூ. 11.5 கோடி பெற்றுள்ளது. 

dmk donations

திமுகவிற்கு டிரம்ப் எலெக்ட்ரோல் டிரஸ்ட் மற்றும் ஜெயபாரத் டிரஸ்ட் ரூ. 8 கோடி அளித்துள்ளது.