கர்ப்பம் தரிக்கத் எத்தனை முறை செய்ய வேண்டும்..? எப்போது செய்ய வேண்டும்..? அவசியம் தெரிஞ்சிகோங்க!
கர்ப்பம் தரிக்கத் தம்பதிகள் எத்தனை முறை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தாம்பத்திய உறவு
திருமணமான தம்பதிகள் சிலர் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் அடைவார்கள். சிலருக்கு சில மாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம். இதனால் அச்சம் அடைந்து உடனே மருத்துவரை அணுகாமல் சில முயற்சிகளைத் தம்பதிகளே செய்து பார்ப்பது நல்லது.கரு நிற்கத் தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலே போதுமானது.
ஆனால் இதை அதை எத்தனை முறை செய்ய வேண்டும்..? எப்போது செய்ய வேண்டும்..? என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது.
எப்போது செய்ய வேண்டும்..?
பல முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்று கூறுவது தவறானது. இப்படிச் செய்வதால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாம்பத்திய உறவு கொள்வதால் பலன் பெறலாம்.
அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி முடிந்து 14வது நாளில் தாம்பத்திய உறவு கொள்வதால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த சமயத்தில் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும்போது காத்திருக்கும் முட்டையால் அவை ஈர்க்கப்படலாம். அப்போது அது கரு முட்டையாக உருவாகி கர்ப்பம் தரிக்கப்படும்.