ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிகோங்க!
ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில்
மைலேஜ் என்பது ஒரு லிட்டர் எரிபொருளை உட்கொண்டால் ஒரு வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதுதான் மைலேஜ் என்ற சொல்லுக்கு விளக்கம் ஆகும். பொதுவாக உங்கள் வாகனம் குறித்து யார் உங்களிடம் பேசினாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி உங்கள் வாகனம் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பது தான்.
இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக வாகனம் வைத்திருப்பவர்கள் பெரிதும் கவலைப்படக்கூடிய விஷயம் இந்த மைலேஜ் தான்.அதே நேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து, ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிற விபரங்கள் பலருக்கும் தெரியாது.
மைலேஜ்
அதிலும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கி.மீ மைலேஜ் கொடுக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்த்தது உண்டா? 24-25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கி.மீ. தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாகப் பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கி.மீ.க்கும் 5-6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் 1 கி.மீ. தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசல் வரையிலும் செல்லும்.