ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்லது? மீறினால் சிக்கலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக பேரீச்சம்பழம் இருக்கிறது. இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருப்பதால் விரதம் இருப்பவர்கள் கூட விரத காலங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக இதை உட்கொள்வதுண்டு.
அப்படியாக ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்? அளவிற்கு மீறினால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதை நாம் சிறிதளவு எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆனால் அதுவே அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது வீக்கம், வாயு மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே உடலில் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பேரீச்சம்பழத்தை அளவோடு மற்றும் கட்டுப்பாட்டோடு எடுத்துக் கொள்வது அவசியம்.
மேலும், பேரீச்சம்பழம் அதிக அளவு சாப்பிடும் பொழுது எடை அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. பேரீச்சம்பழத்தில் இயற்கையாக சர்க்கரைகள் மற்றும் கலோரி அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடுகின்ற அந்த பழத்தின் சக்தியை உடல் பயன்படுத்தாவிட்டால் அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
அதனால் தான் எடை குறைக்க விரும்புபவர்கள் பேரீச்சம்பழத்தை குறைவாக சாப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடுவது சிறந்தது. சமயங்களில் உலர்ந்த பேரீச்சம்பழம் நீண்ட நேரம் பாதுகாக்க ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அந்த பேரீச்சம்பழம் நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்பொழுது சிலருக்கு அரிப்பு, சிவப்பு, புள்ளிகள் மற்றும் தோலில் வீக்கம் போன்ற அறிகுறிகள் வரலாம். அதனால் பேரீச்சம் பழங்களை சாப்பிடும் முன் நன்றாக கழுவி சாப்பிடுவது அவசியமாகிறது.

குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம் கொடுக்கும் பொழுது நாம் மிகவும் கவனமாக கொடுக்க வேண்டும். பேரீச்சம்பழம் மிகவும் கடினமாகவும் சற்று ஓட்டும் தன்மையுடன் இருப்பதால் குழந்தைகள் சரியாக மென்று சாப்பிட முடியாமல் மூச்சு திணறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் பேரீச்சம்பழத்தை நேரடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக மசித்து அல்லது சிறிய துண்டுகளாக கொடுக்கலாம். குறிப்பாக சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் பேரீச்சம்பழத்ம் சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
சிலருக்கு ஒவ்வாமையை அதிகரித்து இருமல் மற்றும் சுவாசிப்பதில் சில பிரச்சனைகளை கொடுத்து விடுகிறது. அதனால் சமயங்களில் பேரீச்சம்பழம் அளவோடு சாப்பிடுவதும் அவசியமாக இருக்கிறது.