நடிகை நயன்தாரா கையில் அணியும் வாட்ச் விலை எத்தனை கோடி தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage
By Thahir Jul 22, 2022 09:28 AM GMT
Report

நடிகை நயன்தாரா கைகளில் அணியும் வாட்ச்சின் விலை 1 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,

நடிகை நயன்தாரா கையில் அணியும் வாட்ச் விலை எத்தனை கோடி தெரியுமா? | How Many Crores Is The Watch Worn By Nayanthara

கடந்த மாதம் 9-ம் தேதி சென்னை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.பின்னர் இந்தியா திரும்பினர். 

பிசியான நயன்தாரா விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான திரைப்படத்தில் நடித்து வருவதால் பிசியாக இருந்து வருகிறார்.

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் எடுக்கும் பணியில் பிசியாக இருந்து வந்தார்.

பீரோ முழுவதும் வாட்ச்

நடிகை நயன்தாராவுக்கு கையில் வாட்ச் கட்டுவது மிகவும் பிடிக்கும் என்பதால் கையில் விதவிதமாக வாட்ச் கட்டி வந்தார்.

நடிகை நயன்தாரா கையில் அணியும் வாட்ச் விலை எத்தனை கோடி தெரியுமா? | How Many Crores Is The Watch Worn By Nayanthara

இதற்காக தன் வீட்டின் பீரோ முழுவதும் ஏராளமான வாட்ச் வைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த பிராண்ட் Richard Mille.இதன் விலை ரூ.1 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.