நயன்தாராவுக்கு Netflix நிறுவனம் செலவு செய்த தொகை இத்தனை கோடியா?
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் செலவு செய்த தொகை குறித்த செய்தியை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.
மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.
காதல் திருமணம்
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிரமாண்ட கண்ணாடி மாளிகை
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த மாதம் 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.
சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணத்திற்கு செலவு எவ்வளவு
ஆடம்பரம்மாக செய்யப்பட்ட திருமணத்திற்கு கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு செலவாகியிருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.
இதனிடையே திருமண செலவு அனைத்தையும் நெட் பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. திருமண செலவை ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் நயன்தாராவுக்கு சுமார் ரூ.25 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.
ஹனிமூன்
திருமணம் நடந்து முடிந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவு சென்றனர்.
அப்போது அவர்கள் தங்களது புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார்.
திருமண புகைப்படங்கள்
திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் வெளியிட்டு வந்தார் விக்னேஷ் சிவன். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறது.
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
தொடர் பதிவுகளால் கடுப்பான Netflix?
நயன்தாரா,விக்னேஷ் சிவனின் திருமணத்தை வீடியோ பதிவு செய்து அதை தனது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிட்டு ஒப்பந்தம் செய்தது அந்நிறுவனம்.
இதையடுத்து திருமண செலவை அனைத்தையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டது அந்த நிறுவனம் இதற்காக அந்நிறுவனம் திருமணத்திற்காக ரூ.25 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை சமூக வளைத்தலத்தில் வெளியிட்டு வருவதால் கடுப்பான நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.