இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..தகுதியான பெண்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா..?
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதாமாதம் 1000 ரூபாய் பெற போகிறவர்கள் மொத்தமாக எவ்வளவு பெண்கள் என்ற பட்டியலை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மகளிர் உரிமை தொகை
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திமுக சார்பில் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது மகளிர் உரிமை தொகை. ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் இதற்காக 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டமானது செப்டம்பர் 15 - ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
எவ்வளவு நபர் தகுதி
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களை தேர்ந்தெடுக்க சில வரைமுறைகளும் வைக்கப்பட்டன. கடந்த ஜூலை 24-ம்தேதி முதல் 3 நாட்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் விண்ணப்பங்கள் விநியோகம் செய்த நிலையில், ஜூலை 27-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிந்தது.
இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடந்து நிலையில் தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை பெருபவர்களை பட்டியலை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் தொகையை பெற 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.