அவள் என்னவள்... நந்தனாவிடம் வித்தியாசமாக காதலை தெரிவித்த மனோஜ் பாரதிராஜா
இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கடந்த மார்ச் 7ஆம் திகதி இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அவர் திடீரென்று நேற்று மாலை காலமானார்.
அவரது இறப்பு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என கேரளாவில் இருக்கும் மனோஜின் மனைவி நந்தனாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மனோஜ் பாரதிராஜா நடிகை நந்தனாவை காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளாக காதலித்தாலும் மொத்தம் ஆறு முறை தான் சந்தித்து பேசினோம் என முன்பு பேட்டி ஒன்றில் நந்தனா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ லவ்யூ என சொல்லாமல் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என மனோஜ் பாரதிராஜா கேட்டிருக்கிறார்.
இது சரிப்பட்டு வராது என நந்தனா சொல்ல நேராக அவரின் பெற்றோரிடமே மனோஜ் பேசிவிட்டார்.
தனக்கு மனைவி என்றால் அது நந்தனா தான் என்கிற உணர்வு வந்ததால் காதலை சொல்லாமல் நேராக திருமணம் பற்றி மனோஜ் பேசினார்.
தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என மனோஜ் பாரதிராஜா கற்பனை செய்து வைத்திருந்தாரோ அதே மாதிரி நந்தனா இருந்திருக்கிறார்.
மேலும், நானும் மனோஜும் சேர்ந்து நடித்தபோது ஒரு சிடியை கொடுத்து நான் பண்ணது என்று கேட்குமாறு சொன்னார்.
அதை திருப்பித் திருப்பி கேட்டு தான் அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது என்று கூறியுள்ளார்.