ஆட்சி மாறினாலும் ஒரு பயனும் இல்லை: தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் திமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரை மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணும், மேலத்தெருவைச் ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனிடையே இருவரும் தனிமையில் இருந்ததை அந்த பெண்ணுக்கே தெரியாமல் ஹரிஹரன் வீடியோ எடுத்துள்ளார். இதனை தன்னுடைய 3 நண்பர்களுக்கு போட்டு காண்பிக்க அவர்கள் அனைவரும் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஹரிஹரனிடம் சொல்லி உள்ளார்கள்.இதற்கு ஹரிஹரனும் சம்மதித்துள்ளார்.
இப்படி ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது என 8 பேர் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் 18ம் தேதி வரை அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்தப் பெண் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதை தாண்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் 2 பேர் ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் என்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடுத்ததாக 8 பேரில் 4 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தான் அதிர்ச்சியளிக்ககூடிய விஷயம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் 2 விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது போன்றோர் இந்த பெண் மட்டுமல்லாது இப்படி பல பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுவதால் இவ்வழக்கு விஸ்வரூபம் எடுக்க உள்ளது.
மேலும் இது ஆளும் திமுக தரப்பை கடும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் இப்படித்தான் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே திடுக்கிட வைத்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்வது பொதுமக்களிடையே கோபத்தை வரவழைத்துள்ளது.
ஏற்கனவே வடமாநிலங்களில் நிலவும் கூட்டு பாலியன் வன்கொடுமை சம்பவங்களின் தொடர்ச்சி தமிழகத்திலும் எழுந்துள்ளதா என்ற கேள்வி எழுந்ததுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.