நடிகை நயன்தாரா அம்மா ஆனது எப்படி - வாடகை தாய் இவர் தானா?
ஜுன் 9ம் தேதி திருமணம், அக்டோபர் 9ம் தேதி இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆன நயன்தாரா அது எப்படி 4 மாதத்தில் என்று சமூக வலைத்தளத்தின் பேசு பொருளாக இருக்கிறது.
இரட்டை குழந்தைகள்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தம்பதி தாங்கள் அப்பா அம்மா ஆகிவிட்டோம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தனர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு தரப்பு திருமணத்திற்கு முன்பு அப்படி, இப்படி இருந்தால் கூட திருமணத்தின் போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்குமே என கேள்வி எழுப்பி வருகிறது.
இதனிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாடகை தாய் என்றால் யார்?
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி? வாடகை தாய் என்றால் யார் என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
வாடகை தாய் என்றால் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து இன்னொரு பெண் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வது.
உதாரணத்திற்கு ஒரு பெண் தனது கருமுட்டையையும், ஆண் தனது விந்தணுவையும் கொடுத்து செயற்கை முறையில் கருவை உருவாக்குவார்கள்.
பின்னர் அந்த கரு ஆரோக்கியமாக உள்ள ஒரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும்.
அந்த கரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அந்த வகையில் வேறொரு பெண்ணின் கருவை சுமக்கும் பெண்களை வாடகை தாய் என்கின்றனர்.
இப்படி தான் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து தங்களது கருவை வேறொரு பெண்ணின் வயிற்றில் வளர வைத்து இரட்டை குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியுள்ளனர் என்கின்றனர்.
நயன்தாரா கேரளாவை பூர்விகமாக கொண்டதால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலமாக தான் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அடம்பிடித்த நயன்தாரா
விக்னேஷ் சிவன் இந்த அக்ரீமெண்டிற்கு ஒத்துக்கொண்டதால் தான் நயன்தாரா திருமணத்திற்கு சம்மதித்தாக தகவல் கசிந்துள்ளது.
நயன்தாராவின் ராசியான நம்பர் 9 என்பதால் அன்றைய தினமே குழந்தை பிறக்க வேண்டும் என அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.
அதனால் தான் 9 ம் தேதி ஆப்ரேஷன் செய்து குழந்தைகளை வெளியில் எடுத்ததாக கூறுகின்றனர்.
நாள், நட்சத்திரம் பார்த்து இந்த நாள், இந்த தேதியில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என்ற மோசமான பழக்கம் வசதி படைத்தோர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
விதிகளை மீறினார்களா?
ஒரு தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.
ஆனால் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில் சட்டத்தை மீறி குழந்தை பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியில் ஒருவருக்கு இயற்கையாகவே குழந்தை பெற வழியே இல்லை என மருத்துவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
அப்படி என்றால் நயன்தாராவுக்கோ, விக்னேஷ் சிவனுக்கோ இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லையா என கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தியாவில் வாடகை தாயாக வரும் பெண்கள் சம்மந்தப்பட்ட உறவினர்களாக இருப்பது கட்டாயம் என்கின்றனர்.அத்தோடு அந்த பெண் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் ஆகியிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விதிமுறைகளை பின்பற்றி நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குழந்தை பெற்றுக் கொண்டார்களா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பிராந்திய யுத்தமாக மாறும் போர்...! அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் IBC Tamil
