நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு, சொந்தமாக கார்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான துலாம் சரவணனின் தேர்தல் வாக்குறுதிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரங்கள் களைகட்டியுள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.கவின் பூமிநாதன் ஆகியோரும் களம் காண்கின்றனர்.
இவர்களை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் துலாம் சரவணன். இவரது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு, 20 லட்சம் மதிப்பில் கார், வீடு ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்துதல் போன்றவை எழுதப்பட்டுள்ளது.
இதுதவிர பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை மற்றும் வீட்டு வேலைக்காக ரோபோ என பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துள்ளார்.