வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு..! குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

Jammu And Kashmir Death
By Thahir Jan 02, 2023 09:40 AM GMT
Report

காஷ்மீரில் வீடு புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு 

காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்திற்கு உட்பட்ட மேல் டாங்கிரி கிராமத்தில் நேற்று மாலையில் ஆயுதங்களுடன் 2 மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்துள்ளனர்.

அங்கு தனியாக இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

House entry and shooting 4 people died

பின்னர் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.

அப்பகுதி மக்கள் போராட்டம் 

இச்சம்பவத்தை பயங்கரவாதிகள் தான் நிகழ்த்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இத்தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.