வீடு இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியை மீட்கும் பணி தீவிரம்

Tamil Nadu Police
By Thahir Nov 29, 2022 05:11 AM GMT
Report

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பழமையான வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கியுள்ள மூதாட்டியை மீட்கும் பணி தீவிரம்.

வீடு இடிந்து விழுந்து விபத்து 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 70 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது இந்த வீட்டில் பாத்திமா பீவி என்ற 74 வயதான மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீடு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

house-collapse-the-old-woman-trapped-in-the-rubble

வீடு இடிந்து விழுந்த போது வீட்டில் மூதாட்டி பாத்திமா பீவி இடிபாடுகளில் சிக்கியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 2 பொக்லைன் வாகன உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ள மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மூதாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.