வரலாற்றில் இடம் பிடித்த ஜுன் மாத வெப்பம் - நாசா சொன்ன புதிய தகவல்..!
NASA
By Thahir
உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
நாசா அறிக்கை
இந்த நிலையில் உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் கடந்த ஜுன் மாதம் தான் என நாசா தெரிவித்துள்ளது. ஜுன் 2023க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.