வடகறியில் உப்பை அதிகமாக போட்ட சமையல் மாஸ்டர் ... கோபத்தில் மேலாளர் செய்த கொடூர செயல்
திருச்செந்தூர் அருகே சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஹோட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் திருச்செந்தூர் தெற்குப் புதுத் தெருவைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதேபோல் அருகிலுள்ள பி.டிஆர் நகரைச் சேர்ந்த பாலமுருகன் இதே ஹோட்டலில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இதனிடையே சம்பவம் நடந்த தினத்தில் வெள்ளையன் ஹோட்டலில் சமையல் செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த பாலமுருகன் வடகறியை சாப்பிட்டுவிட்டு உப்பு அதிகமாக உள்ளதாக வெள்ளையனிடம் கேட்டுள்ளார். ஆனால் சரியாக உள்ளதாக வெள்ளையன் கூற இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரத்தில் பாலமுருகன் வெள்ளையன் மீது என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கூறி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து ஊற்றியதோடு மிரட்டியுள்ளார். இதில் இதனால் வெள்ளையனைக்கு முகம், தலை, வலது தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இதுகுறித்து வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பாலமுருகனை கைது செய்தனர்.