Wednesday, Mar 12, 2025

நாய் சாப்பிட்ட சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஹோட்டல் - பரபரப்பு!

Thoothukudi Shawarma
By Sumathi 2 years ago
Report

 தனியார் உணவகத்தில் சிக்கனை நாய் சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியம்

தூத்துக்குடியில் சமுத்திரா என்ற பிரபல தனியார் குடும்ப உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்திற்கு சுமார் 4க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. அதன்படி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கிளை ஹோட்டலில், வெளியே சவர்மா தயார் செய்வதற்காக சிக்கனை வேக வைத்துள்ளனர்.

நாய் சாப்பிட்ட சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு விற்ற ஹோட்டல் - பரபரப்பு! | Hotel In Tuticorin Sold Shawarma Eaten By Dog

அப்போது சவர்மா தயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் கவன குறைவாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் நாய் ஒன்று அங்கு வேக வைத்துள்ள சிக்கனை எட்டிப் பிடித்து சாப்பிட்டுள்ளது. அதனை சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர்.

நாய் சாப்பிட்ட சிக்கன்

அது தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜார்ஜ் சாலையில் இயங்கி வரும் சமுத்திரா உணவகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின், மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். உணவு டோர் டெலிவரி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க சொமேடோ, ஸ்விகி ஆகிய நிறுவனங்களுடன் இந்த உணவகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.