கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - ஹோட்டல் இடிந்து விழுந்ததால் 16 பேர் பலி

china hotelgasexplosion-
By Petchi Avudaiappan Jan 08, 2022 08:56 PM GMT
Report

சீனாவில் கேஸ் வெடித்து ஹோட்டல் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் அரசு அலுவலகத்தின் வளாகத்தில் இயங்கி வந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் கேஸ் கசிவால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஹோட்டலில் மதிய உணவு அருந்தி கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கினர். இதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதனிடையே விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணியில் இந்த  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.