உணவகத்தில் உயர்கிறது சாப்பாடு விலை - உணவு பிரியர்கள் கவலை!
சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவங்களில் சாப்பாடு விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1200 ஆக இருந்த சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.2400க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் விலையும் லிட்டர் ரூ.180 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் அரிசி,பருப்பு மற்றும் சமைப்பதற்கான மூலப்பொருட்களின் அனைத்து விலையும் உயரந்துள்ளது.
இந்த விலை உயர்வால் 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை எங்களுக்கு செலவு ஏற்படும் என்பதால் உணவு விலை உயர்த்துவதை தவிற வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முடிவெடுக்க வரும் 6ம் தேதி ஓட்டல் அதிபர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 20 சதவீதம் வரை உணவுகளின் விலையை உயர்த்தினால் மட்டுமே தங்களுக்கு கட்டுப்படி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இட்லி,பொங்கல்,பூரி உள்ளிட்ட உணவுகளின் விலை ரூ.5 வரை உயர வாய்ப்புள்ளது.
மேலும் அசைவ உணவுகளின் பிரதான உணவான பிரியாணியின் விலையும் ரூ.20 உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.