இனி ஹோட்டலில் உணவை வீணாக்கினால்.. ஒரு தட்டுக்கு ரூ.20 அபராதம்!
தட்டில் உணவை மீதம் வைத்தால் 20 ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
20 ரூபாய் அபராதம்
புனேவில் உள்ள ஒரு தென்னிந்திய உணவகம் புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தட்டில் உணவை மீதம் வைத்தால் அபராதம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு தட்டுக்கும் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து @rons1212 என்ற எக்ஸ் பயனர், தனது கணக்கில் உணவகத்தின் மெனுவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
புதிய விதி
அதில் மெனுவின் கீழே உணவை வீணாக்கினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு உணவகமும் அதேபோல் செய்ய வேண்டும்.
திருமணம் மற்றும் விழாக்களிலும் அபராதம் விதிக்கத் தொடங்குங்கள் என்று தலைப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலர் உணவகத்தின் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்.
இன்னும் சிலர் தங்களுக்குப் பிடிக்காத உணவை எப்படிச் சாப்பிடுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
