கனமழை எதிரொலி - வீட்டு மண்சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
hosur
heavyrain
oldman death
By Anupriyamkumaresan
ஓசூர் அருகே மழையின் காரணமாக வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள எம்.எம் நகர் குடியிருப்பு பகுதியில் கிருஷ்ணப்பா (70) என்பவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெய்த மழையால் வீட்டின் மண் சுவர் ஊறி இடிந்து விழுந்ததில் கிருஷ்ணப்பா பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.