எறும்புகள் போல் குட்டையில் ஆனந்தமாக குளியல் போட்ட யானைகள் - இணையதளத்தில் ட்ரோன் வீடியோ வைரல்..!
ஆனந்தமாக குளியல் போட்ட யானைகள்
கிருஷ்ணகிரி, ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள குட்டையில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்தமாக குளியல் போடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 70 காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை ட்ரோன் மூலம் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அப்போது, காட்டு யானைகள் அங்குள்ள குட்டையில் ஆனந்த குளியல் போட்டதை ட்ரோன் கேமரா பதிவு செய்துள்ளது.
பார்ப்பதற்கு யானைகள் அனைத்தும் எறும்புகள் போல் சாரை, சாரையாய் சென்று குட்டையில் குளியல் போட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள் மனதை மிகவும் கவர்ந்துள்ளது.