இரவு 11மணி..கழிப்பறை சென்ற மாணவன்..விநோதமாக தண்டித்த விடுதி நிர்வாகம் - ஷாக் சம்பவம்!

China World Social Media
By Swetha Sep 27, 2024 09:00 AM GMT
Swetha

Swetha

in சீனா
Report

இரவில் கழிப்பறை சென்றதால் மாணவனை ஊழியர்கள் தண்டித்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

மாணவன்..

சீனாவில் உறைவிடப் பள்ளி விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு இரவு 10.45 மணிக்குமேல் மாணவர்கள் வெளியில் செல்லக் கட்டுப்பாடுகள் விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 11மணி..கழிப்பறை சென்ற மாணவன்..விநோதமாக தண்டித்த விடுதி நிர்வாகம் - ஷாக் சம்பவம்! | Hostel Punished School Boy For Using Toilet At 11

அதையும் மீறி மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், விடுதியில் படித்து வந்த மாணவர் ஒருவர் நிர்வாகத்திடம் அனுமதி கோராமல்

இரவு 11 மணியளவில் பள்ளிக்கு வெளியே இருந்த கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். இரவில் வெளியே சென்ற மாணவரைக் கண்ட விடுதி நிர்வாகம், அவரை அழைத்துக் கண்டித்துள்ளது. மேலும், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொன்னதுடன்,

அதை மற்ற மாணவர்களிடத்தில்ரும் விநியோக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி ”நான் பள்ளி விதிகளை கடுமையாக மீறிவிட்டேன். மாலையில் கழிப்பறைக்குச் செல்வது மற்ற மாணவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், எனது வகுப்பிற்கு அவமானத்தையும் ஏற்படுத்தியது.

3வேலையும் சமைப்பது கிடையாது.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம் - ஏன் தெரியுமா..?

3வேலையும் சமைப்பது கிடையாது.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம் - ஏன் தெரியுமா..?


விடுதி நிர்வாகம் 

எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் மீண்டும் ஈடுபட மாட்டேன்” என மன்னிப்புக் கடிதம் எழுதிய அந்த மாணவர், அதை 1000 காப்பி எடுத்து பள்ளி மாணவர்களிடம் விநியோகித்துள்ளார்.

இரவு 11மணி..கழிப்பறை சென்ற மாணவன்..விநோதமாக தண்டித்த விடுதி நிர்வாகம் - ஷாக் சம்பவம்! | Hostel Punished School Boy For Using Toilet At 11

இந்த விவகாரம் தீயாய்ப் பரவிய நிலையில், இணையத்தில் இதுகுறித்த பயனர் ஒருவர், “இரவு 11 மணிக்குப் பிறகு கழிப்பறைக்குச் செல்வது ஏன் பள்ளியின் விதிகளை மீறுகிறது என்று எனக்கு புரியவில்லை.

கழிப்பறை செல்ல வேண்டிய நேரத்தில் யாரால் கட்டுப்படுத்த முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் செயலுக்கு சீனாவின் கல்வி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பள்ளி நிர்வாகத்தின் ஒழுக்கக் கொள்கைகளைத் திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர் எழுதிய கடிதத்தின் 1,000 பிரதிகளை அச்சிட்டதற்கு, இழப்பீடு வழங்கும்வகையில், மாணவருக்கு 100 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1200) செலுத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.