அரசு மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள் - வீடியோவால் சர்ச்சை!
அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் குத்தாட்டம் ஆடியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஓனம் பண்டிகை
கன்னியாகுமரி, குழித்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கொண்டாடிய ஓணம் பண்டிகை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதில், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையின் உள்பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தி பணி நேரத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளனர்.
வெடித்த சர்ச்சை
அதேவேளை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை பணியாளர்கள் மீது சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.