சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து - அமைச்சர் விளக்கம்

Government of Tamil Nadu DMK Chennai Ma. Subramanian
By Thahir Nov 16, 2022 10:26 PM GMT
Report

சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

Hospital Fire - Minister

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ மேலும் சில இடத்திற்கு பரவாமல் தடுத்தனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hospital Fire - Minister

இந்த தீ விபத்து குறித்து, மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதில், தரைக்கு அருகே செல்ல கூடிய மின் வயரால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரிசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.