ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Tamil nadu Chennai
By Thahir Apr 28, 2022 07:04 AM GMT
Report

ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை தீ விபத்து குறித்து விளக்கம் அளித்து பேசினார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு,ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவுக்கு சொந்தமான 105 ஆண்டுகள் பழமையான கட்டடம் மின் கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் ஏற்பட்டது.

அந்த கட்டடத்திலும்,அதற்கு அருகில் இருந்த கட்டடத்தில் 128 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நேர்ந்த 5 மணித்துளிகளில் முதலமைச்சர் தஞ்சைக்கு பயணம் செய்த நிலையில் அவருக்கு இந்த தகவல் தெரிந்தவுடன் எனக்கும்,துறை செயலாளருக்கும் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்கள்.

அவர் சொன்ன உடன் 10 நிமிடங்களில் மருத்துவமனைக்கு விரைந்தோம் என்றார். தீ விபத்து ஏற்பட்ட 5 முதல் 10 நிமிடங்களில் 4 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணிகளை தொடங்கி விட்டனர்.

திமுகவுக்கும்,அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காகவே தமிழக முதலமைச்சர் நேரடியாக அனுப்பி வைத்தார்.

மீட்பு பணியின் போது கண் எரிச்சல் ஏற்பட்ட போதும் நானும் துரையின் செயலாளரும் உள்ளே சென்றோம். நிறைய ஊடகவியலாளர்கள் சொன்னார்கள் உள்ளே போகதீர்கள் ஆபத்து என்று ஆனால் ஊடகவியலாளர்களும் அங்கிருந்த நோயாளிகளை மீட்டனர்.

அரசின் துரித மீட்பு பணியால் ஓர் உயிர் சேதம் கூட ஏற்படவில்லை என்றார்.உண்மையில் வேறு ஆட்சியா இருந்திருந்தா வேறு முதலமைச்சரா இருந்திருந்தா வேறு யாரும் கண்டுகாம இருந்திருந்தா 128 பேர் பலியாகி இருப்பார்கள்.

முதலமைச்சர் எடுத்த வேகமான நடவடிக்கையாள் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது உண்மை நிலவரங்களை தெரிந்து கொண்டு பேசுவது அவசியமானது.

கட்டடங்கள் எல்லாவற்றையும் கட்டியது கலைஞர் சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்தது நீங்கள் என்றார். மேலும் அவர்,கட்டட பணிகள் முடிவடைந்த நிலையில் ஒயிட் வாஷ் மற்றும் கலர் வாஷ் செய்து திறந்து வைத்தது நீங்கள்.

மருத்துவமனைக்கு பெயர் வைத்தது கலைஞர்,10 வருடமாக கட்டடத்தை பராமரிக்காமல் போனது தான் இந்த விபத்துக்கு காரணம் என்றார்.

தீ விபத்து ஏற்பட்ட 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என அறிவித்தார்.