கான்ஜுரிங் திரைப்படத்தில் சம்பவம் நடந்த உண்மையான பேய் வீடு ரூ.8 கோடிக்கு விற்பனை

the conjuring
By Petchi Avudaiappan Sep 28, 2021 11:51 PM GMT
Report

கான்ஜுரிங் திரைப்படத்தில் நடந்த சம்பவம் உண்மையாக நடந்த வீடு உண்மையான பேய் வீடு ரூ8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த கான்ஜுரிங் படத்தில் வீட்டிற்குள் பேய் இருப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தின் ஸ்பெஷலிட்டியே இந்த திரைப்படத்தின் மையக்கதை ஒரு உண்மை சம்பவம் என்பது தான்.

1971களில் அமெரிக்காவின் ஒரு வீட்டில் இப்படியா ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதை வைத்து தான் "தி கான்ஜுரிங்" என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.இந்த உண்மை சம்பவம் நடந்த வீடும் நடந்த சம்பவம் குறித்த செய்தியும் அந்த நேரத்தில் வைரலாக டிரெண்டானது.

அமெரிக்காவில் உள்ள இந்த வீட்டில் மொத்தம் 14 அறைகள் 2 பாத்ரூம்கள், 3 பெட்ரூம் கள் உள்ளன. இந்த மிகப்பெரிய பங்களாக 1826ம் ஆண்டு முதன்முதலில் கட்டப்பட்டது. 1971களில் இங்கு பேய் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த வீடு சமீபத்தில் ரியல்டர் என்ற நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வந்தது. இந்த வீடு தற்போது 1.2 மில்லயன் டாலர் அதாவது ரூ8 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.