சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க செலவு செய்தது இத்தனை கோடியா ? - வெளியான பரபரப்பு தகவல்

United States of America China
By Irumporai Feb 19, 2023 05:15 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் எல்லையில் பறந்த சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சீன பலூனை சுட்டு வீழ்த்த செலவான தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சீன உளவு பலூன்

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள சீன அரசு அது உளவு பலூன் அல்ல லை, ஈரப்பதம், அழுத்தம் அல்லது காற்றலைகள் பற்றி அளவிடுவதற்கான கண்காணிப்பு கருவிகளை உள்ளடக்கி இருக்கும் என கூறியது. ஆனால் அமெரிக்க அரசு கடந்த 10-ந்தேதி கனடாவின் யுகோன் வான்பரப்பில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க அதிபர் பைடன் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதன் அடிப்படையில், அது அமெரிக்க விமான படையால் வீழ்த்தப்பட்டது.

அமெரிக்கா செலவு

இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த மர்ம பொருள் ஒரு ராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று தெரியவில்லை என கூறியது. ஆனால், அதன் பறந்து செல்லும் பாதை மற்றும் கண்காணிப்பு பகுதியின் வழியே சென்றது.

அதன் திசை ஆகியன மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும் என எண்ணப்படுகிறது என தெரிவித்தது. இவற்றை வைத்து பார்க்கும்போது, சீன உளவு பலூனை வீழ்த்துகிறோம் என கூறி, அமெரிக்க அரசு ரூ.1,000 மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்துவதற்காக ரூ.3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 54 மதிப்புடைய ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது.