மாடலிங் துறைக்கு போவியா? - சொந்த சகோதரியை சுட்டுக் கொன்ற நபர்

Attempted Murder
By Petchi Avudaiappan May 06, 2022 07:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

மாடலிங் தொழிலில் ஈடுபட்டதற்காக தனது 21 வயது பெண்ணை சகோதரனே  சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ள ரெனாலா குர்த் ஒகாராவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் நடனம் மற்றும் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக உள்ளூர் ஆடை நிறுவனம் ஒன்றில் மாடலிங் செய்தும், பைசலாபாத் நகரின் திரையரங்குகளில் நடனமாடியும் வந்துள்ளார். இது குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரானது என்று கூறி இந்த தொழிலை விடும்படி அவரை தொடர்ந்து சித்ராவின் பெற்றோர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துள்ளார். 

இதனிடையே  தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக  கடந்த வாரம் சித்ரா பைசலாபாத்திலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது  நடன நிகழ்ச்சியை உறவினர் ஒருவர் செல்போனில் தனக்கு அனுப்பியதைப் பார்த்து ஆத்திரமடைந்த சகோதரன் ஹம்சா சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் ஆத்திரத்தில் அவரை ஹம்சா துப்பாக்கியால் சுட்டார். இதில்  சம்பவ இடத்திலேயே சித்ரா உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  வழக்குப்பதிவு செய்த ஹம்சாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அம்மாகாணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.