42வயதிலும் ஃபிட்னஸுடன் இருக்கிறார்; அவரின் அமைதி பிடிக்கும் - தோனியை புகழ்ந்த இலங்கை பவுலர்!
இந்திய முன்னாள் கேப்டன் தோனியை இலங்கை அணி பவுலர் மதிஷா புதிரான புகழ்ந்து பேசியுள்ளார்!
மதீஷா பதிரான
இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பத்திரான இலங்கை கிரிக்கெட் வீரர் ஆவார். இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்காவின் பவுலிங் ஆக்ஷனை அப்படியே பிரதிபலிப்பதால் குட்டி மலிங்கா என்று அழைக்கப்படுகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல்-ல் ஆடம் மில்னேவுக்கு மாற்று வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். . குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி முதல் பந்திலேயே, சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். நடந்து முடிந்த 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் பல வெற்றிகளுக்கு இவர் வீசிய யார்க்கர்களே காரணம்.
இவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் இவரை செல்ல பிள்ளையாக வைத்திருந்தார். இவரைப்பற்றி பல நேரங்களில் தோனி புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் 8.01 என்ற நல்ல எக்கனாமியையும் வைத்து இருந்தார் பதிரானா. இதனால் சிஎஸ்கே அணிக்கான நிரந்தர வீரராக பதிரானா நிச்சயம் இருப்பார் என்று ரசிகர்களிடையே சொல்லப்பட்டு வருகிறது.
தோனி தான் காரணம்
இந்நிலையில் தோனியை பற்றி பதிரானா கூறுகையில் 'ஒரு இளம் வீரரான எனக்கு, மனதளவில் தோனி போன்ற ஜாம்பவான் இடத்தில் இருக்கும் ஒருவர் நம்பிக்கை வைக்கும் போது, அது என் எதிர்கால பயணத்திற்கான எனர்ஜியாகவும் மாறிவிடுகிறது.
அந்த நேரத்தில் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தோனியிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொண்டுள்ளேன். அதில் முதல் இடத்தில் இருப்பது அவரின் அடக்கம் தான். அதுதான் அவரின் வெற்றிக்கு காரணம் என்றே நினைக்கிறேன். தோனிக்கு 42 வயசானாலும், இன்றும் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். நான் சிஎஸ்கே அணிக்கு சென்றபோது, ஏதும் அறியா குழந்தையாக இருந்தேன்.
அங்கே யாருக்கும் என்னை தெரியாது. ஆனால் அவர்கள் என்னை புரிந்துகொண்டு பயிற்சி அளித்தார்கள். இப்போது டி20 போட்டியில் எப்படி விளையாட வேண்டும், எப்படி என் 4 ஓவர்களை வீச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டுள்ளேன். தோனி என்னிடம் 'உடலை காயமடையாமல் பார்த்து கொண்டால், பெரிய சாதனைகளை சிஎஸ்கே அணிக்காகவும், இலங்கை அணிக்காகவும் படைக்க முடியும்' என்று கூறினார்.
அதேபோல் ஒவ்வொரு முறையும் என்னுடைய ஆக்சனில் மேம்பட விரும்புகிறேன். அதனை மேம்படுத்தியும் வருகிறேன். நான் இலங்கை அணியின் ஜாம்பவானான லாஸித் மலிங்காவை சந்தித்த போது, அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னை சந்தித்த போது, அவரை போன்ற ஒருவரை பார்ப்பதாக உணர்ந்தார் என்று சொன்னான் என்று மதிஷா பத்திரான பேசியுள்ளார்.