கொரோனா தடுப்பூசி போட்டால் டெஸ்லா கார், ஐபோன் பரிசு...!

Covid vaccines Hongkong Lucky draws on you
By Petchi Avudaiappan Jul 31, 2021 09:16 PM GMT
Report

 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேசமயம் பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தைத் போக்க பரிசுத் தொகை, பல்வேறு சலுகைகள் ஆகியவை அந்தந்த அரசுகள் அறிவித்து வருகின்றது.

அந்த வகையில் ஹாங்காங் அரசு உலகிலேயே யாரும் வழங்காத வகையில் டெஸ்லா கார், அபார்ட்மெண்ட் வீடு, ஐபோன், தங்கக்கட்டி, வைரம் பதித்த ரோலக்ஸ் வாட்ச், ஒரு லட்சம் மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர் ஆகியவை குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகள் தங்களது மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.