ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் : ஹாங்காங்கை தட்டி தூக்குமா இந்திய அணி
5-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
சூப்பர் 4
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
ஹாங்காங்கை தட்டி தூக்குமா இந்திய அணி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது.
இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதாக விளையாட்டுத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும்.
வெற்றி யாருக்கு
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக : ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், ஆவேஷ்கான், அர்ஷ்தீப் சிங்.
[
ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.
காத்திருக்கும் ரசிகர்கள்
2018-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாங்காங் வெற்றிக்கு அருகே நெருங்கியது. 286 ரன்கள் இலக்கை விரட்டிய நிலையில் 26 ரன்கள் வித்தியாசத்தில்தான் ஹாங்காங் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மீண்டும் ஹாங்காங் களமிறங்க உள்ளது.
கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.