ஆஆ.. நான் குப்பையைச் சாப்பிடனும்.. பேசும் குப்பைத் தொட்டி - இணையத்தை கலக்கும் வீடியோ!
ஹாங்காங்கின் உள்ள பேசும் குப்பைத் தொட்டி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹாங்காங்
சோஷியல் மீடியாவில் வினோதமான நிகழ்வுகள் குறித்த பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மைக் கவரும்.அந்த வகையில், குப்பைத் தொட்டி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொதுவாக நாம் குப்பைத் தொட்டியைச் சாலையோரத்தில் பார்த்து இருக்கிறோம் . அந்த வீடியோவில், ஹாங்காங்கின் டிஸ்னிலேண்டில் குப்பை அமைக்கப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டி
இந்த குப்பைத் தொட்டியோ அங்குமிங்கும் நகர்ந்து, குப்பைகளை என்னிடம் கொடுக்கும்படி தனித்துவமான பாணியில், மக்களிடம் கேட்கிறது . மேலும் நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்.
உண்மையில் இங்கு எதுவும் இல்லையா? ஆஆஆ! எதுவும் இல்லை, குப்பை எல்லாம் போய்விட்டது. நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன் என்ற வாய்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.