தேனிலவில் பயங்கரம்: கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி

By Fathima Feb 06, 2026 03:00 AM GMT
Report

ராஜஸ்தானில் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் ஆசிஷ் மற்றும் அஞ்சு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீகங்காநகர் பகுதியில் தம்பதி ஒருவர் மயங்கி கிடப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த அதிகாரிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் சிகிச்சை பலனின்றி ஆசிஷ் உயிரிழந்தார்.

தேனிலவில் பயங்கரம்: கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி | Honeymoon Murder Wife Kills Husband

அஞ்சுவிடம் விசாரணை நடத்தியதில், இரவு உணவு முடித்துவிட்டு நடைப்பயிற்சிக்காக வந்த போது அடையாளம் தெரியாத கார் ஒன்று இடித்துவிட்டு சென்றதாகவும், தன்னிடம் இருந்த நகைகளை பறித்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்தில் சோதனையிட்ட போது அவர் கூறிய தகவல்கள் முரணாக இருந்துள்ளது.

தொடர்ந்து அஞ்சுவிடம் விசாரணை செய்ததில் அவர் பொய் சொல்வது கண்டுபிடிக்கப்பட்டது, அவரது செல்போனை சோதனையிட்டதல் சஞ்சு என்பவருடன் பேசியது தெரியவந்தது.

தேனிலவில் பயங்கரம்: கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி | Honeymoon Murder Wife Kills Husband

இருவரும் காதலித்து வந்த நிலையில், அஞ்சுவிற்கு ஆசிஷ்வுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதனால் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

சஞ்சுவிற்கு துணையாக இருந்த இரு நண்பர்கள் உட்பட நான்கு பேரை பொலிசார் கைது செய்தனர்.

தேனிலவில் பயங்கரம்: கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி | Honeymoon Murder Wife Kills Husband