வெறும் தண்ணீரிலே கூட நாம் ஆரோக்கியமாக வாழலாம்.. எப்படி தெரியுமா?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு எவ்வாறு அவசியமோ அதை போல் தண்ணீரும் மிக மிக அவசியமாக இருக்கிறது. அப்படியாக தினசரி நாம் குடிக்கக்கூடிய தண்ணீரையும் சற்று ஆரோக்கியமாக மாற்றலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
பல்வேறு இயற்கை பொருட்களில் இருந்து கிடைக்கின்ற தண்ணீர் உடலை நீரோட்டமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கிறது.

அப்படியாக, தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை கலந்து குடிக்கும் பொழுது நம்முடைய நச்சுத்தன்மை முழுவதுமாக நீங்குகிறது. அதை போல், ஒரு கிளாஸ் நீரில் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பிறப்பு குடித்தாலும் அவை நம்முடைய செரிமானத்தை வலுப்படுத்தி வாயு அஜீரணத்திலிருந்தும் நிவாரணம் கொடுக்கிறது.
உடலில் இருக்கக்கூடிய இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதிகாலை அந்த தண்ணீரை குடிப்பதனால் நமக்கு ஒரு நல்ல பலன்கள் கிடைக்கும். இதனால் மூட்டு வலியில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.
அவ்வப்போது, வயிற்று வலி அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திற்கு உடனடி நிவாரணம் பெற ஓம நீர் பயனுள்ளதாக இருக்கும். இதை லேசாக கொதிக்க வைத்த பிறகு குடித்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
அதேபோல், மல்லி நீரை அவ்வப்போது குடித்து வர நம் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது. அதாவது தனியாவை ஊறவைத்த அந்த தண்ணீரை குடிப்பது நம் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை நீக்கி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.