வீட்டுச்சுவர் ஓட்டையில் பெரிய நாகப்பாம்புடன் 32 குட்டிகள் - அடுத்து நடந்த சம்பவம்!

India Snake Telangana
By Jiyath Jun 23, 2024 07:06 AM GMT
Report

ஒரு வீட்டில் 32 நாகப்பாம்பு குட்டிகள்  கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பாம்பு குட்டிகள் 

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் மின்வாரிய எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி இருந்துள்ளது.

வீட்டுச்சுவர் ஓட்டையில் பெரிய நாகப்பாம்புடன் 32 குட்டிகள் - அடுத்து நடந்த சம்பவம்! | Home Wall Cobra Cubs Telangana

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜு, உடனடியாக இதுகுறித்து பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிக்கும் குழுவினர், பல மணி நேரம் போராடி ஒரு பெரிய நாகப்பாம்புடன் அதன் 32 குட்டிகளையும் பிடித்தனர்.

போக்குவரத்து காவலரை காரோடு இழுத்துச் சென்ற போதை ஆசாமி - பகீர் வீடியோ!

போக்குவரத்து காவலரை காரோடு இழுத்துச் சென்ற போதை ஆசாமி - பகீர் வீடியோ!

பின்னர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். ஒரு வீட்டில் பெரிய நாகப்பாம்புடன் 32 குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.