துருக்கியில் வீட்டு வாடகை ரூ.1.31 லட்சமாக உயர்வு - அல்லாடும் மக்கள்

Turkey Death Turkey Earthquake
By Sumathi Feb 08, 2023 06:39 AM GMT
Report

துருக்கியின் நிலநடுக்கம் காரணமாக வீட்டு வாடகை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 நிலநடுக்கம்

சிரியாவின் அசாஸ் நகரில் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நகரில் பெரும்பாலான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. தற்போது இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கியில் வீட்டு வாடகை ரூ.1.31 லட்சமாக உயர்வு - அல்லாடும் மக்கள் | Home Rent Turkey Rises To Rs 1 31 Lakh Earthquake

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில்ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. சாலை, தெருக்களில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங் களில் மக்கள் தங்கியுள்ளனர். இரவில் கடும் குளிர் நிலவுகிறது. சில நேரங்களில் மழை பெய்கிறது. அனைத்து துன்பங்களையும் சகித்து வாழ்கிறோம்.

வாடகை உயர்வு

கடந்த மாதம் நான் தங்கியிருந்த வீட்டுக்கு 4,500 லிரா (ரூ.19,700) வாடகை அளித்தேன். அந்த வீடு பூகம்பத்தில் இடிந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக நானும் எனது குடும்பமும் உயிர்தப்பிவிட்டோம். இப்போது புதிதாக வாடகைக்கு வீடு தேடி அலைகிறோம்.

ஆனால் வீட்டின் மாத வாடகையாக 30,000 லிரா (ரூ.1.31 லட்சம்) கேட்கின்றனர். இப்போதைய நிலையில் இந்த வாடகையை கொடுக்க முடியாது. எனவே தொடர்ந்து நிவாரண முகாமில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏராளமானோர் கார், வாகனங்களில் தங்கியுள்ளனர்.