அனைவருக்கும் வீடு,வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அதிமுக சார்பில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.
* அனைவருக்கும் வீடு வழங்க அம்மா வீடு திட்டம் நிறைவேற்றப்படும் * வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி * அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் * மாதம் தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு * இலவச அரசு கேபிள் சேவை வழங்கப்படும் * நகரப்பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை வழங்கப்படும் * கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் * நல்வாழ்வு பெயரில் இயற்கை மேலாண்மை ஆராய்ச்சி நிலையம் * இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் * கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் * ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்
* ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் * பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை * அனைவருக்கும் சோலார் அடுப்பு வழங்கப்படும் * மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் * கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி * மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் * மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கீடப்படும் * CAA சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும் * வேலையில்லா இளைஞருக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் * அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு * கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும் * முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும் * தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்யும் * அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை * வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்படும் * உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ நடவடிக்கை * மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும் * அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்
* இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம் * அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன் * ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும் * கரிசல் மண் எடுக்க தடையில்லாமல் அனுமதி * குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் * கோதாவரி - காவிரி இணைப்பு துரித நடவடிக்கை எடுக்கப்படும் * கடல் சுற்றுலா பூங்காக்கள் * வழக்கறிஞர்கள் சேம நல நிதி உயர்வு * காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் * தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்
* புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் * அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் * மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை * மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும் * ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம் * கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
* பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் * சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும் * நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் * தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு * உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை * நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி * முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும் * நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்
(ஆதாரம்: தினகரன்)