“என்னடா சொல்றீங்க?” - பாம்புகளை விரட்ட சொந்த வீட்டை கொளுத்திய உரிமையாளர்

america burnshownhouse
By Petchi Avudaiappan Dec 04, 2021 06:25 PM GMT
Report

அமெரிக்காவில் பாம்புகளை விரட்ட முயற்சித்து சொந்த வீட்டை உரிமையாளர் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டில் அடைந்துள்ள பாம்புகளை விரட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டின் ஒருமூலையில் இருந்து புகையை போட்டு அவற்றை விரட்ட முயற்சித்துள்ளார். 

ஆனால் புகை தீயாக மாறி அவரது வீடு பற்றி எரிந்தது.  தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தகவறிந்து வந்த சுமார் 75 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்க போராடினர்.

வீட்டின் உரிமையாளர் பாம்புகளை விரட்ட புகையை பயன்படுத்தியபோது அருகில் இருந்த நிலக்கரியில் தீப்பற்றி இத்தகைய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரூ.7.5 கோடி மதிப்புள்ள வீடு எரிந்து சேதமடைந்தாலும், உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.