விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடா? விளக்கம் கேட்கும் உள்துறை அமைச்சகம்
விஜய்யின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம் கேட்க உள்துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடா?
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி உள்துறை அமைச்சகம் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் பாதுகாப்பு வழங்கும்.
இந்த பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+ என வேறுபடும். கடந்த மார்ச் மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் கரூரிர் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விஜய் மீது செருப்பு வீசப்பட்டுள்ள நிலையில், பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இருந்ததா என விளக்கம் கேட்க உள்துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில், விஜய்யின் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.